என்னைக் கவர்ந்த இயக்கம் – சுதேசி.
’இந்தியப் பொருளாதாரத்தின் ஆணி வேர், கிராமிய முன்னேற்றமே’ என்னும் அடிப்படைக் கருத்து, சுதேசி இயக்கத்தினரால் பலஇடங்களில் பேசப்பட்டு உணர்த்தப்பட்ட விஷயம்.
என்னால் இயன்றதை ஏதாவதொரு கிராமத்திற்குச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எழுந்த போது என் மனதில்
தோன்றிய கிராமம் – நான் அச்சன்கோவிலுக்குப் போகும் வழியில் தரிசித்துச் செல்லும் கோட்டவாசல் கருப்பசாமி எழுந்தருளியுள்ள மேக்கரை கிராமம்.