Thursday, October 13, 2011

பகவான் தோற்றத்தை பற்றி கீதையில்:


ஸ்ரீ கிருஷ்ணர் மாயை சக்தியை தன் வசத்தில் வைத்துக் கொண்டு ஓர் உடலைப் பெற்றவர் போலதோற்றத்தில் அவதரித்தார்
 அதாவது ஈச்வரனோ மாயையைத் தன் வசத்தில் வைத்திருப்பவர்
ஜீவனோ மாயையின் வசத்தில் உள்ளவன் இதுவே ஜீவனை ஈச்வரனிலிருந்து வேறுபடுத்துகிறது
ஞானிகளின் விஷயத்தில் அவர்கள் தன் உண்மை ஸ்வருபத்தை அறிந்தாலும், கர்மபலன்களின் விளைவாக பிறவியைப் பெற்றிருப்பதால் ஈச்வரனிலிருந்து வேறுபடுகிறார்கள்
 ஸத் என்பது எப்பொழுதும் தன் இருப்பை இழப்பதில்லை இருப்பின் மூன்றுவித நிலைகள்
 பாரமார்திக ஸத்யம்- முற்றிலும் உண்மை-ஸத்யம் ஞானம் அனந்தம் என்னும் தன்மை கொண்டப்ரஹ்மம் எந்தவித குணங்களும் அற்றது
சுயமான இருப்பு கொண்டது
 வியவஹாரிய் ஸத்யம் -அன்றாடமபலவியவஹாரங்களசெய்கிறோம், பல் பொருட்களை அனுபவிக்கிறோம் இவை வியவஹாரிய ஸத்யம் உடையவை
 பராதிபாஸிக ஸத்யம்  நாம் கனவிலும் கற்பனையிலும் காண்பவை. பார்ப்பதால் மட்டுமே ஓர் இருப்பு நிலையைப் பெறுவது

உலகம்-ஈச்வர ஸ்ருஷ்டிஅவருடைய நியதிகளுடன்,ஓர் ஒழுங்குடன் நடக்கிறது-வ்யாவஹாரிக ஸத்தியம்
நாமாகவே ஓர் உலகை ஸ்ருஷ்டி செய்து கொள்கிறோம் தவறுகளும், குழப்பங்களும் கொண்டது-ஜீவ ஸ்ருஷ்டிப்ராதிபாஸிக ஸத்தியம்

வ்யாவஹாரிக ஸத்தியமும் ப்ராதிபாஸிக ஸத்தியமும்
மாறிக்கொண்டே இருப்பவை அனுபவிப்பவை
இவை இரண்டிற்கும் அடிப்படையாக மாறுதலற்ற ஓர் உண்மை
உள்ளது அது ஸச்சிதானந்த ஆத்மாவாகும்
ஸத்திய வஸ்து நிலையான இருப்பைக் கொண்டது ஆனால் நாம் காண்பவற்றுக்கு இருப்பு அந்தஸ்தை கொடுக்கும் பொருட்டு
இருப்பு மூன்றுவிதங்கள் என்று கூறப்படுகிறது

கிருஷ்ணாவதாரம் எந்தவகை ஸத்யத்தைச் சேர்ந்தது ?

பிறப்பும் மாறுதலும் அற்றவன் என்னும்போது பாரமார்திக ஸத்யம் ஆனால் அர்ஜூனனின் எதிரில் காணப்படும் கிருஷ்ணர்என்ற உடல் பாரமார்திக ஸத்யம் ஆகாது
 கிருஷ்ணர் என்ற உடல் கர்மபந்ததினால் ஏற்படாததால் வியவஹாரிய ஸத்யமும் ஆகாது
 மாயையை தன் வசத்தால் தோன்றியதாக கூறுவதால்
ப்ராதிபாஸிக ஸத்யமா? காணப்படுவது ஆனைத்தும் காண்கிறார்கள் என்றாலும் உண்மை என்று கூறிவிட முடியாது
உ-ம் நீல நிற ஆகாசம், வளைந்த வானம்
கிருஷ்ணர் பிறந்தது போன்று ஓர் உடலுடன் காணப்பட்டார்-உடலை உண்மை என்று கூறமுடியுமா?

கிருஷ்ணர் உடல் பாரமார்திக ஸத்யமும் இல்லை, வியவஹாரிய் ஸத்யமும் இல்லை, ப்ராதிபாஸிக ஸத்தியம் என்றே கூறவேண்டும்

இறைவன் ஏன் அவதரிக்கிறார் ?
நல்லோர்களும் தேவர்களும் கூட்டாக பிரார்த்திப்பதால் (புராணங்கள் கூறுகின்றன) அஸுரர்கள் தவவலிமையால் குறிப்பிட்ட வடிவத்தில் தங்களை கொன்றாலொழிய மரணம் அடையகூடாது என்று பெற்றவரத்தால் குறிப்பிட்ட வடிவத்தில் குறிப்பிட்ட பணிக்காக தோன்றுவது அவதாரம் ஆகிறது
 நரஸிம்ஹாவதாரம் வாமனாவதாரம் போன்று ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் செய்வதற்காக அமையலாம்
ராமர் எந்தவிதத் துன்பத்தின் நடுவிலும் தர்மத்தை விடாது
எப்படி வாழ்வது என்று காட்டினார்
கிருஷ்ணர் ஆனந்தமும் ஞானமும் ஒருங்கே வடிவாக இருந்தார்
 ஸம்பவாமி என்பதற்கு உடல் எடுத்தவர் போன்றும் , பிறந்தவர் போன்றும் தோன்றுகிறார்
 வேதத்தில் தேவர்களை பற்றி கூறி இருந்தாலும்
அவதாரத்தை பற்றி கூறவில்லை
ராமர்,கிருஷ்ணர் பற்றி புராணத்தில்தான் கூறி உள்ளது

மகாபாரதம் ஓர் இதிஹாஸம் இப்படிதான் இருந்தது
எனறு பொருள்படும்.மகாபாரதம் சரித்திரப் பின்னணியை கொண்டிருந்தாலும்ராமாயணத்தைப் போல் ஒரு காவியமும் ஆகும்

காவியத்தைப் படைப்பவர்கள் அவர்கள் விரும்பும் ரஸங்கள்
சொல்ல விரும்பும் செய்திகள் இவற்றுக்காக கதையுடன் கற்பனையையும் சேர்ப்பதற்கு சுதந்திரம் உண்டு
உ-ம் ராவணனைப் பத்துத் தலைகள், ஹநுமார் குரங்காக இருந்தாலும் உரையாடுபவராகவும்

 எங்கு செயலை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளதோ அங்கு
சுதந்திரத்தை துஷ்ப்ரயோகம் செய்யும் வாய்ப்பு உள்ளது
தர்மத்திற்குக் குந்தகம் விளையும் போது அதர்மம் ஓங்கும் போது பல மனிதர்களினபிரார்த்தனையின் பலனாக
(ஸமஷ்டி கர்ம பலனாக) பகவான் அவதரிக்கிறார்

 ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் தோன்றுவதற்கான நோக்கம்,
தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்று உறுதியாக உள்ள ஸாதுக்களைக் காப்பதன் பொருட்டும்
அதற்காக-தர்மத்தைப் பின்பற்றாதிருப்பவர்களை தண்டிப்பதற்கும்
தர்மத்தை நிலைநாட்டுவதற்கும்








Sunday, September 25, 2011

மகாவதார பாபாஜி


மகாவதார பாபாஜி

 பத்ரிநாராணுக்கருகில் வடக்கு இமயமலையின் செங்குத்தானப் பாறைகள் -மகா குருவான பாபாஜி வாழும் பேற்றை இன்னும் பெற்றிருக்கின்றன
மரணமற்ற பாபாஜி ஓர் அவதாரமாவார்
பாபாஜியின் ஆன்மீக நிலை மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டது


உபநிஷதங்கள் ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையையும் நுட்பமாகப் பிரித்து வகைப் படுத்தியிருக்கின்றன.
சித்தர்-பூரணத்துவம் அடைந்தவர்
ஜீவன் முக்தர் வாழும் பொழுதே முக்தியடைந்தவர்
பராமுக்தர் - தலையாய முக்தி-மரணத்தின் மீது முழு ஆதிக்கம்
பிறவிச் சுழற்சியிலிருந்து முழுவதுமாக தப்பித்தவர்.
பராமுக்தர் அரிதாக ஸ்தூல தேகத்திற்குத் திரும்பினால்-
தெய்விக நியமனம் பெற்ற ஓர் அவதாரமாகிறார்-
அவதார புருஷர் உலக நடப்பிற்கு உட்பட்டவரல்லர்
ஒளிபடைத்த அவர் தேகம் இயற்கைக்கு எவ்வகையிலும்
கடன்படுபதிலிருந்து விடுதலை பெற்றுள்ளது

பாபாஜியின்  நோக்கம்-தீர்க்கதரிசிகளுக்கு அவர்களுடைய்
சிறப்புக் காரியங்களை நடத்த உதவுவது
மறைந்துவிட்டிருந்த கிரியா கலையை மறுமலர்ச்சி பெறச் செய்தமை (சீடரான லாஹிரி மகாசயருக்கு-யோக தீட்சையை அருளியது)
தனித்த ஆனால் மெளன சக்தியாக எளிய மறைவிலேயே செயல்புரிதல்
அவதாரங்கள்-ஏதாவதொரு வரலாற்று நிகழ்ச்சியைவிட-மனிதனின் மெதுவான பரிணாம வளாச்சியில் அதிகமாக அக்கறை காட்டும் வேலையை மேற்கொள்ளுகிறார்கள்


மகான்கள் மக்களின் ஸ்தூல பார்வையிலிருந்து எப்பொழுதும்
தங்களை திரையிட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் நினைத்த
மாத்திரத்தில் ம்றைந்துவிடும் திறன் பெற்றுள்ளார்கள்
இக்காரணங்களினால் அவர்கள் பொதுவாக தங்களைப் பற்றி
மெளனத்தைக் கடைபிடிக்கும் படி தங்கள் சீடர்களுக்கு உத்தரவிடுவதாலும் ஆன்மீகச் சிகரமாக விளங்கும் பலர்
உலகிற்குத் தெரியாமலேயே இருந்து விடுகிறார்கள்

பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் எப்பொழுது உச்சரித்தாலும் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசியை ஈர்க்கிறான்.

சிரஞ்சீவித் தன்மை பெற்ற பாபாஜீ உடலில் வயதைக் குறிக்கும்
அடையாளங்களைப் பெறவில்லை அவர் இருபந்தைது வயதிற்கு
மேற்படாத இளைஞராகவே தோற்றமளிக்கிறார்
சிவந்த நிறமும் நடுத்தர உயரமும் பருமனுமுள்ள எழிலும் வலுவும் கொண்ட தேகம், காணக்கூடிய பிரகாசத்தை வீசுகிறது
அவருடைய கண்கள் கருமையும் சாந்தமும் கருணையும் கொண்டுள்ளது நீளமான ஒளிரும் கேசம் தாமிர நிறத்திலுள்ளது
சில சமயங்களில் அவருடைய் முகம் லாஹிரி மகாசயருடையதை ஒத்திருக்கிறது


பாபாஜி தம் ஸ்தூல உடலைத் தாங்கி இருப்பதற்கு ஒரே ஒரு
காரணம்தான் உள்நோக்கமாக இருக்கிறது-மனித வர்க்கத்திற்கு
அதன் சொந்த சாத்தியக் கூறுகளை ஒரு வலுவான உதாரணத்தினால் எடுத்துக் காண்பிக்கும் விருப்பமாகும்

Saturday, January 29, 2011

கர்மத்தின் இலக்கணம் என்ன?/யஜ்ஞம் என்றால் என்ன ?


கர்மம் வெவ்வேறு வகைப்படும் ;
அதனால் அதன் இலக்கணமும் வேறுபடும்.

நாம் இச்சித்துச்செய்யும் செயல்களும் கர்மம்தான்
கண்கொட்டல் போன்று தானாக இயங்கும் செயல்களும் கர்மம்தான்.ஆகையால் பொதுவாக அசைவு அல்லது சலனம்தான்
கர்மம் என்று இலக்கணம் கூறலாம்
உடல் முழுவதும் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது-
மூச்சு விடுதல்,சிந்திப்பது,சாப்பிடுவது எல்லாமே செயல்தான்
உயிர் வாழும் பிராணிகள் செயலில் ஈடுபடாத நேரமே இல்லை
தூக்கத்தில் மூச்சு விடும்போது உறுப்புகள் வேலை செய்கின்றன.

கர்மத்தைச் செய்யத் தூண்டுவது எது?
அசைவுதான் செயல் என்றால்,இவ்வுடல் உயிர் வாழும்வரை
நம்மால் செய்லின்றி இருக்க முடியாது
இச்சித்துச் செய்யபடுவது செயல் என்றால் ஏதோ ஒன்றால் ஏவப்பட்டது போன்று நம் வசமின்றி ஏதாவது ஒரு செயலை நாம்
செய்துக்கொண்டே இருக்கிறோம்
இந்த ‘ஏதோ ஒன்றைபகவான் ‘பிரக்ருதி  என்று கூறுகிறார்

எல்லாப் படைப்புகளும், எல்லாக் கார்யங்களும் எந்தமூலப் பொருளிலிருந்து பிறக்கின்றனவோ அந்த உபாதாநகாரணம்-
பிரக்ருதி எனப்படும்
இறைவனின் சக்தியிலிருந்து உபாதாந காரணமான பிரக்ருதியிலிருந்துதான் நமது மனதும் பிறந்திருக்கிறது

பிரக்ருதி என்பது ஸத்வம்,ரஜஸ்,தமஸ் எனற 3 குணங்களால்
ஆனது இந்த 3 குணங்கள் நம் மனத்திலும் காணப்படுகின்றன.


அந்த:கரணம்-எனப்படும் மனதானது பிரக்ருதியின் மூன்று குணங்களையும் கொண்டது

1.தமஸிலிருந்து- செயலால் என்னகிடைக்கும்
2 ரஜஸிலிருந்து- பெருமைக்காக செய்ய விரும்பும்பொழுது
3.ஸத்வத்திலிருந்து - தேவைக்கு செய்யும்பொழுது

இந்த மூன்று வித இச்சைகளினால்தான் அனைத்து உயிரினங்களும் கர்மத்தில் ஈடுபடுகின்றன

யஜ்ஞம் என்றால் என்ன ?



யஜ்ஞார்தா த் கர்மணோSந்ய்த்ர லோகோSயம் கர்மப ந் ந: 

ர்தம் கர்ம கெளந்தேய முக்தஸங்: ஸமாசர 
                                    பகவத் கீதா 3-9

யஜ்ஞத்தின் பொருட்டான கர்மத்தினால் மட்டுமே இந்த மனித உலகம் கட்டுறுகிறது ; வேறு எந்த கர்மத்தினாலும் அல்ல.
அர்ஜுனா அதன் (யஜ்ஞத்தின்) பொருட்டு பற்றை
விட்டவனாய் கர்மத்தை நன்கு செய்வாயாக.

யஜ்ஞம்-(வைதிக சடங்கு) என்ற சொல் நம் சாஸ்த்ரத்தில் மிகவும் முக்கியமானது
யஜ்ஞத்தில்- கொடுப்பவர்,கொடுக்கப்படுவது , வாங்குபவர் என்ற
மூன்று கூறுகள் உள்ளன. இதை தவிர அர்ப்பணிக்கபடும் இடம்
என்ற நான்காவது கூறும் உள்ளது

விரிவாக பார்த்தால் கொடுத்தல் என்பது - யஜ்ஞத்தில் ஈச்வர அர்ப்பணம் ஆகும் ஸ்வாஹா நம சொல்லி அர்ப்பணிக்கிறோம்

ஆகையால் நாம் இச்சித்துச்செய்யும் செயல்களை ஈச்வரனுக்கு அர்ப்பணிக்கும் போது செயல்கள் யஜ்ஞ ம் ஆகிறது.
அப்படிப் பட்ட செயல்களால் இந்த மனித உலகம் கட்டுறுகிற்து இதன் மூலம் பகவான் கூறுவது யஜ்ஞத்தின் பொருட்டு பற்றை
விட்டவனாய் கர்மத்தை நன்கு செய்வாயாக




Thursday, January 13, 2011

கர்மம்-செயலை பற்றிய பொதுவான ஸந்தேஹம்

நான் என்ன செய்ய வேண்டும்? என்பது பொதுவான ஸந்தேஹம்
அர்ஜுனனைப் போல், குழப்பத்திலும் ஸந்தேஹத்திலும் இருந்து பாடம் கற்க முனைந்தேன் .
நன்றி - ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதிக்கு.
அவரது வீடுதோறும் கீதோபதேசம் என்ற நூலுக்கு.
கீதையின் வழிகாட்டலும்- என் புரிதலும் இங்கே.

 கர்மத்தைவிட ஞானம் உயர்ந்தது என்றால்,
 என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஈடுபடுத்துகிறாய்?
 முரண்பாடுள்ளது போன்ற சொற்களால் என் புத்தியை நீ   
 குழப்புவது போன்றுள்ளது.
 எதனால் நான் நலனைப் பெறுவேனோ (இரண்டில்) அந்த ஒன்றை 
 உறுதி செய்து கூறு  
 என்று பகவானிடத்தில் அர்ஜுனன் சரணடைந்தான்.

கர்மத்தைப் பற்றி ஸ்ரீ பகவானின் விளக்கம்

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித் யே கர் மண: (பகவத்கீதா 3-8)

விதிக்கபப்ட்ட கடமைகளை நீ செய்வாயாக;
ஏனெனில், செய்யாமையைவிட செய்தல் மேலானது
அதுவுமல்லாது, உன்னுடைய சரீர பராமரிப்பு கூட,
செயலின்மையால் நடக்காது.

வேதம்-, விஹித, நிஷித்த, காமய, ப்ராயச்சித்த என்று
நான்கு வித கர்மங்களைக் கூறுகின்றது.
விஹித கர்மம் என்பது நியத கர்மம் எனப்படும்.
வேதம்- வர்ணத்திற்கும்,ஆச்ரமத்திற்கும் தகுந்தவாறு
அன்றாடம் செய்ய வேண்டிய நித்ய கர்மங்களையும்
குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டிய நைமித்திக கர்மங்களையும் கூறுகிறது- இவை இரண்டும்
‘செய்யப்பட வேண்டியவை என்று விதிக்கப்படவை:;
சில கர்மங்களைச் செய்யக்கூடாது என்று வேதம் தடை செய்கிறது
ஹிம்ஸை செய்யக்கூடாது என்று வேதம் கூறுகிறது
இவை நிஷித்த கர்மங்களாகும் .
குறிப்பிட்ட பலன்களைப் பெறுவதற்காகச் செய்யும் கர்மங்கள் காம்ய கர்மங்கள் எனவும்
குறிப்பிட்ட பாப கார்யங்களுக்கு ( நாம் செய்யாமல் விட்டதாலோ,தவறான் வழியில் செய்தற்காகவோ) மன்னிப்பு கோரி
செய்யப்படும் கர்மங்கள்- ப்ராயச்சித்தம் எனப்படும்.
நியத கர்மங்களை யோக புத்தியுடன் செய்யும்போது அந்தக்கரண-சுத்தி பலனாகும். மற்றும் மனவளர்ச்சி, மனப் பக்குவம் ஏற்படுகிறது.
ஜீவனுக்கு முதலில் கொடுக்கப்பட்டது உயிர்சக்தி,பின் தேச காலத்தோடு கூடிய வாழ்க்கை
ஒவ்வோர் உயிருள்ள ஜீவனும் தான் எப்படியாவது பிழைத்திருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வு கொண்டுள்ளது
உயிர் பிழைத்திருப்பதற்கு மட்டுமே நமக்கு இந்தப் பிறவி கொடுக்கப் படவில்லை. ஸாதிக்க வேண்டிய புருஷார்த்தங்களாக - அறம்,பொருள், இன்பம், வீடு (மோக்ஷம்) என்ற நான்கையும் வேதம் காட்டுகிறது.

கர்மம்-செயல் அதன் பலன் அல்லது விளைவு தவிர்க்க முடியாது

பந்தம் என்கிற முடிச்சு மூன்று விஷயங்கள் கொண்டது
  1. நம்மை பற்றிய அறியாமை இதனால் நம்மை கர்த்தாவாக கருதுவது  
  2. கர்த்தா என்பதால் விளையும் ஆசையும் காமமும்
  3. ஆசையால் செய்வது கர்மம் அல்லது செயல்.
செயலால் ஏற்படுவது பந்தம்.

பற்றிய பந்தத்திலிருந்து விடுதலை அடைவது தான் மோஷம்


கர்மத்தைத் துறப்பதால் மோக்ஷம் அடையமுடியாது; இது உண்மை
கர்மத்தில் ஈடுபடுவதாலும் மோக்ஷத்தை அடையமுடியாது இதுவும் உண்மை.கர்மம் நம்மை பந்தத்தில் ஆழ்த்தக் கூடும் இதுவும் உண்மை
கர்மத்தை-செயலை யோக புத்தியுடன், கடமை உணர்வுடன் ஆற்றும் பொழுது மனம் பக்குவம் அடைகிறது.


செய்யாமையைவிட செய்தல் மேலானது.
கடமைகளைச் செய்தல் பந்தப்படுத்த வேண்டும் என்பது நியதி அல்ல. மாறாக, செய்யாமலிருந்தால் ஒன்றும் ஸாதிக்க முடியாது.
உடல் நலம் கெடும். அதைவிட மன நலம் கெடும். ஆகையால் செயலில் ஈடுபடுவது சிறந்ததாகும். செயலில் ஈடுபட அஞ்சவேண்டாம். செயலை யோக புத்தியுடன் செய் என்பதே ஸ்ரீ பகவானின் விளக்கம்


சரீர யாத்ரா“ நமது சரீரம் ஒவ்வொரு நிலையாக பயணம் செய்து
கொண்டு வருகிறது. இந்தப்பயணமானது செயல்களில் ஈடுபடாவிட்டால் நடக்காது.
யோக புத்தியுடன் செய்யபடும் செயல் மறைமுக ஸாதனமாகி மனம் சுத்தம் அடைந்து விடுதலைக்கு வழிவகுக்கிறது.
இப்படி யோக புத்தியுடன் செய்யப்படும் கர்மமே யஜ்ஞம் எனப்படுகிறது.

அடுத்து யஜ்ஞம் என்ற செயல் அது காட்டும் வழி என்ன என்பதை அறிய முயற்சிக்கிறேன் 

Monday, January 3, 2011

பஞ்ச மஹா யஜ்ஞங்கள்

தேவ யஜ்ஞம்

நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு நற்பேறுகளுக்காக நன்றி கூறும் வகையில் தினந்தோறும் நாம் இறைவனுக்குப் பூஜை
செய்கிறோம் சமைத்த உணவை நிவேதம் செய்கிறோம் இது
தேவ யஜ்ஞ மாகும் 
கோவிலுக்குச் சென்று தொழுவது தேவயஜ்ஞமாகும்

ப்ரஹ்ம யஜ்ஞம்

வேதத்தைக் கற்றும் ஓதியும் கற்பித்தும் அது நசியாமல் பாதுகாப்பது ப்ரஹ்ம யஜ்ஞமாகும்.
நம் சாஸ்த்ரங்கள், புராண இதிஹாஸங்கள் இவற்றை சிரத்தையுடன் படிப்பதும் அவற்றை அடுத்த தலை முறையினர்
கற்பதற்கான உதவிகள் செய்வதும் ப்ரஹ்ம யஜ்ஞமே.

பித்ரு யஜ்ஞம்
நாம் பிறக்கக் காரணமாயிருந்து நமக்கு சரீரத்தைக் கொடுத்து
அதை போஷித்து அறிவு புகட்டிய பெற்றோர்களை நன்கு பேணுதல் பித்ரு யஜ்ஞமாகும். அவர்கள இறந்தபின் அவர்களின்
நற்கதிக்காகச் செய்யப்படும் தர்ப்பணங்கள், ச்ராத்தம் முதலியவையும் பித்ரு யஜ்ஞமாகும் இவற்றின் மூலம் நாம் முந்தைய மூன்று தலைமுறைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.
மநுஷ்ய யஜ்ஞம்
நாள்தோறும் நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வசிக்கும் வீடு மற்றைய அடிப்படை வசதிகள் நமக்குக் கிடைப்பதற்கு பல மனிதர்கள் உழைக்க வேண்டி இருக்கிறது அவர்கள் அனைவருக்கும் தனித்தனியே நன்றி கூறுவது எனபது முடியாத காரியம். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் முன் அதிதிக்கு உணவிட்டு உண்ணுதல் விசேஷமாகும். முடிந்தவரை பசியுடன் இருப்பவர்களுக்கு உணவிடுதல் மற்றவிதங்களில் நம்மைச் சுற்றி உள்ளோர்களுக்கு உதவுதல் முதலியவை மநுஷ்ய யஜ்ஞ மாகும்  இது ந்ரு யஜ்ஞம் என்றும் கூறப்படும்

பூத யஜ்ஞம்
பல்வேறு மிருகங்களும் தாவரங்களும் நேரிடையாகவும் இயற்கை சூழ்நிலையை பராமரிப்பதன்மூலமும் நமக்கு உதவுகின்றன. சமைத்த உணவை இறைவனுக்குப் படைத்தபின்
காக்கை முதலியவற்றுக்குப் போட்டுவிட்டு உண்பது பூத யஜ்ஞமாகும். அரிசி மாவால் கோலமிட்டு எறும்புகளுக்கு உணவிடுதல், பசு நாய் முதலியவற்றுக்கு உணவிடுதல்,
செடிகொடிகள்,பயிர்கள் வாடாமல் நீரூற்றுவதும் பூத யஜ்ஞமே

Tuesday, December 14, 2010

கருப்பஸ்வாமியை பற்றிய சில செய்திகள்

மஹிஷியை வதம் செய்ய மணிகண்டன் பம்பையின் தீரத்தையடைந்தபோது ஐயனின் மெய்க்காப்பாளராகக் குசன்
தோனறினார். மஹிஷிஎன்பவர் லீலா எனும் ஓர் உத்தமப் பெண்ணாயிருந்தாள். சாபம் காரணமாக அரக்கர் குலத்தில் தோன்றினாள்.
மஹிஷி-மாயாசக்தி பெற்றவள் அவள் பெற்றவரமாவது
சிவ-விஷ்ணு சக்தி சேர்ந்தால்தான் அவளை வெல்ல முடியும்.
ஐயப்பதேவன் அவளை வெல்ல 18 நாட்கள் போராட வேண்டியிருந்தது.

குசன் ஐயனின் உடலில் ஒரு சிறு காயங்கூட ஏற்படாமல் பாதுகாத்ததுமின்றி மஹிஷியின் பிசாசுப்படையின் பெரும் பகுதியைச் சின்னாபின்னமாக்கினார்.

மஹிஷியினை அழிக்க உதவியது மோக்ஷத்தை தரவல்லதாயினும், பிசாசுகளைக் கொன்றதால் அப்பாவத்தைத் தீர்க்க மீண்டும் ஒருமுறை தோன்றிவிடு என்ற கட்டளையை ஏற்று, சுமார் 350 வருடங்களுக்கு முன் சங்கரன்கோவிலிலுள்ள ஆதிவிநாயகர் தெருவில் வாழ்ந்த குடும்பத்தில் கருப்பன் அவதரித்தார்.

இளம் வயதிலேயே கருப்பன் (குழந்தை) முற்றும் துறந்த ஞானிபோல் வாழ்ந்தார். பிள்ளைப் பிராயத்தைக் கடந்தவுட்ன்
கருப்பன் ஆன்மீகத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தினார்.
கருப்பன் வேதம் ஓதியதால் அவர் குடும்பம்
ஓதுவார் குடும்பம் ஆனது.
கருப்பன் பருவம் அடைவதற்கு முன்னரே பற்றற்ற முழுத்துறவியாக மாறினார்.

துறவிகள் இருவகைப்படுவார்கள்.
ஒருவகை-- மெய்ப்பொருளைக் காணல்-
மற்றொரு வகை-- மடங்கள், மருத்துவ நிலையங்கள், கல்விச்சாலைகள் போன்றவைகளை நிறுவி தொண்டாற்றுதல்.
கருப்பன் முதல் வகையை சேர்ந்தவர்.
கருப்பன் பல அனுபவங்களைப் பெற்று இறுதியில் பைம்பொழில்-மேக்கரை வந்தார். வந்ததை இறைவனின் சித்தம் என எண்ணி
அமைதிபெற்றார்.அதைத் தொடர்ந்து அச்சன் கோவிலுக்கு வந்தார்.
மனிதன் தான் விரும்பும் பொருள்கள் அனைத்தையும் விட      
 உயர்ந்தவன்
கருப்பன்,  கோவில் நைவேத்தியத்தை உண்டு இன்பமாக வாழ்ந்து வந்தார்.
வாரத்தில் ஒருநாள் கருப்பன் வாளேந்தி கல்லாற்றின் கரைநோக்கி நடப்பதுண்டு. அவருடன் சங்கிலி பூதத்தார்
சேப்பாறைமுண்டன்,சப்பாணி,காளைமாடன் போன்றவர்களும்
உடன் செல்வதுண்டு. இவர்களுடன் இரண்டு புள்ளிப்புலிகள்.
சூதும் வாதும் நிறைந்த மனிதர்களைவிட வன விலங்குகளின்
நேர்மையில் கருப்பனுக்கு நம்பிக்கை அதிகம்


தீ பொருளை பக்குவப்படுத்துகிறது. தூய்மைப் படுத்துகிறது அதைப் போன்று இறைவன் தன்னைச் சரணடைந்தவரை பக்குவப்படுததித் தூய்மையாக்குகின்றார்.

ஒரு நாள் இரவு அர்ச்சப்போற்றியின் (திருமேனி) மேல் அன்னை
எழுந்தருளி,ஐயனின் கட்டளைகள் சிலவற்றைக் கூறினாள்.
கருப்பனும் அதற்கு உடன்பட்டார். உலகின் இன்ப துன்பங்களைச்
சுட்டெரித்து வாழும் அத்தவயோகி அன்னையை நோக்கி
“ நான் முற்றும் துறந்தவன். என்னால எங்கும் எப்படியும் வாழமுடியும். நீங்கள் இங்கிருந்து இவ்வுலகைக் காப்பாற்ற வேண்டும்எனக்கூறினார்.
மறு நாள் பகல் முழுவதும் கருப்பன் முகத்தில் என்றுமில்லாத
ஒரு தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருந்தது.

ஞானிகள் எல்லைகளுக்கு அப்பாறபட்டவர்கள்.

கண்ணன் வேடனைக் காரணமாக்கி, இவ்வுலகிலிருந்து, பிரிவை ஏற்படுத்திக் கொண்டார்.
ராமன் சரயூ நதியைத் தேர்ந்தெடுத்துப் பிரிந்தார்.
கருப்பன், திருடர்களின் கோபாவேசம் என்னும் செயலை வைத்து
ஜோதியில் கலந்த சுடர்மணி ஆனார்





Saturday, December 11, 2010

வரலாற்றில் அச்சன்கோவில்

கேரளத்தை இரட்சிப்பதற்காக மேற்கு தொடர்ச்சி ம்லைகளில்
பரசுராமரால் உருவாக்கப்பட்டவை ஐந்து சாஸ்தா கோவில்கள்.
எத்தனையோ யுகங்கட்குமுன்பு பரசுராமரால் பிரதிஷ்டிக்கப் பெற்ற அதே விக்கிரகத்தை அச்சன் கோவிலில்இன்றும் காணலாம்.
அச்சன் கோவில் தர்ம சாஸ்தா விக்கிரகம் மிகுந்த ஒளஷத சக்தி வாய்ந்தது. அச்சன் கோவில் தீர்த்தமும், கைச்சந்தனமும் பாம்புக்கடி,பூச்சிக்கடி விஷத்தை இன்றும் இறக்கிவிடுகிறது,

அச்சன்கோவில் பிரதிஷ்டை கிரஹஸ்தாசிரம வழியைப் பின்பற்றியதாகும் இங்கு தர்ம சாஸ்தா பூர்ணபுஷ்கலா சமேதராக ராஜகம்பீரத்தோடு வீற்றிருப்பதைக் காணலாம்.

பூர்ண - எல்லாச் செல்வங்களின் இருப்பிடமென்றும் எவ்வளவு கொடுத்தாலும் குறையாத நிறைகுடமென்றும் பொருளாகும்.

புஷ்கலா என்றால் மீண்டும் மீண்டும் வாரிவழங்கத் தயாராக நிற்கும் நிலை

கார்த்திகை 30க்குப்பின் மார்கழியில் கொடியேற்றி உற்சவம் அச்சன் கோவிலில் நடைபெறுகிறது
ஸ்ரீபூதபலி,உற்சவபலி,சீவேலி போன்றவை நடைபெறும். தினந்தோறும் ரதவீதியில் மணிகண்ட முத்தய்யனைச் சுமந்தப்டி தேரோடும்.

9ஆம் நாள் அலங்கரித்த தேரில் சுவாமியை இருத்தி பூஜை நடந்த பின் பவனிவருவார். தேர் அம்மன் காவினையடைந்து கருப்பன்ஸ்வாமி துள்ளல் நடைபெறும். அதன் பின் க்ஷேத்திர-பிரதிட்சணம் செய்த பிறகு, ம்ணிகண்டனை பதினெட்டாம்படியில் இறக்கி நிறுத்துவார்கள்.
 ஐயப்பனும் கருப்பனும் இப்பொழுது எதிரெதிரே சந்திப்பார்கள். கருப்பன் கோவில் பூசாரி சலங்கைஅணிந்து,கச்சைகட்டி அரிவாளும் வேலும் தாங்கியபடி விபூதித்தட்டுடன் நடந்துவந்து பதினெட்டாம் படியில் வாளையும் விபூதித்தட்டையும் வைத்து வணங்கிபின் ஸ்வாமியுடன் அம்மன் காவிற்குச் சென்று அடிமுடிகுலுங்க அருள்வாக்குகூறி பக்த்கோடிகட்கு விபூதிப்பிரசாதமளித்தபின் தாழமண்மடத்தையடைகிறார். தந்திரி விபூதி பூசி க்ருப்பனை தன் நிலைக்கு கொண்டுவருவார். 3-ம் திருவிழா முதல் 9-ம் திருவிழாவரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்

க்ருப்பனும் ஒரு மலைப் பணடாரமும் சேர்ந்து காந்தமலையிருந்து கொண்டுவந்த -ஜோதிவாளை அச்சன் கோவில் அரசன் பாதங்களில் சமர்ப்பிப்பார்கள்
பின் அந்த தங்கவாளை யானை மீதேற்றி கருப்பனைக் கொண்டு விட்ட பின்,கருப்பசாமி கோவில் சங்கிலி பூதத்தானுக்கு போற்றி பூஜை செய்வார். அதன் பின் அந்த தங்கவாளினை கொண்டு சென்று அச்சன் கோவில் அரசன்--தர்ம் சாஸ்தா திருப்பாதகமலத்தில் வைத்து வணங்குவர்
ஒன்பதாம் நாள் தேர் வீதி வலம் வந்தபின் கருப்பன் கோவிலுக்கு எழுந்தருளும் போது பகவான் பள்ளிவேட்டை
நடத்துவார்.
பத்தாம் நாள் ஆறாட்டிற்குப் பின் தந்திரி கொடியிறக்குவார்.
மார்கழி 11ம் தேதி தேவியின் உருவங்களையும் களம் எழுதி வைப்பார்கள்  அதையடுத்துவரும் செவ்வாயன்று குருதியும்
வெள்ளியன்று கருப்பன் ஊட்டும் நடைபெறுவதோடு திருவிழா முடிவடையும்.