விஷயங்களை தெரிந்தவை,தெரியாதவை என்று இரண்டாகப் பிரிக்கலாம்.தெரிந்தவைகளை வைத்து தெரியாதவைகளைப் புரிந்து கொள்ளலாம்
தெரிவது என்பது நம் பார்வையில் படுவது.
புரிவது என்பது அறிவால் அறிவது.
எடுத்துக்காட்டாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் –
கோவிலுக்குச் சென்றால் அவர் உருவத்தை கண்ணால் பார்க்கலாம்.
அல்லது நம் வீடுகளில் படத்தில் காணலாம்.
பகவான் எப்படிப்பட்டவர்? அவர் கூறும் தத்துவம் என்ன என்பது,
- பக்தி செலுத்துவதனால் அல்லது
- கீதையைப் படித்தால் அல்லது
- படித்துப் புரிந்தவர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றினால் புரியும்.
தெரிவதற்கும் புரிவதற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
நம் பார்வையில் படுவது, தெரிவது, சிந்தனையில் வருவது
இவை எல்லாம் வெளிச்சம் என்றால்
பார்வையில் படாதது, கண்ணுக்குத் தெரியாதது, சிந்தனையில் வராதது எல்லாம் இருட்டு.
மனிதப் பிறவியே இயல்பில்,அறியாமையுடன் தொடங்குகிறது
குழந்தை பசிக்கிறது என்பதை முதலில்அழுதுதான் வெளிப்படுத்தும். தன் தேவையை உணர்த்த அழுகையைத் தவிர
வேறெதுவும் தெரியாது.
குழந்தை வளர வளர அதன் புரிதல் அல்லது அறிதலும் வளர்கிறது.
தவறுகளை வேண்டும் என்றே யாரும் செய்வதில்லை. அறியாமையால் ஏற்படும் நிகழ்வுகள்தான். நாம் அறியாமையில் இருப்பதால், அறியப்பட வேண்டியது அறிவு ஆகிறது.
இந்த அறியாமையின் அளவு, காலத்துக்கு ஏற்ப அதிகம் ஆகிறது.
அசுரன் இரண்ய கசிபு-’நானே கடவுள்’ எனறான்.
ஏற்க மறுத்தவர்களைச் சிறையில் அடைத்தான். கொடுமைப்படுத்தினான். தன்னைக் கடவுளாக ஏற்க மறுத்த மகனையே அழிக்க நினைத்தான்.
இது அறியாமையால் நடந்தது
இறைவன், நரசிம்மமாய் அவதரித்து, அநியாயங்களில் இருந்து மக்களையும் பிரகலாதனையும் காப்பாற்றினார்.
இரண்யகசிபுவையும் ரக்ஷித்தார்.
அடுத்து வந்த காலத்தில், இராவணன் சீதையை அபகரித்தான்.
கடவுள் ராமனாக அவதரித்தார்.
1.தந்தை சொல் தட்டாத மகனாக, மனிதனாக மக்களுக்கு
வாழ்ந்துகாட்டி,
2.இராவணனையும் ரக்ஷித்து,
3.தர்மத்தை நிலைநாட்டி
ராஜ்யத்தை ஆண்டார்.
கெளரவர்கள் 100 பேர்.
சூதாட்டம்,சூழ்ச்சி,பெண்ணை அவமானப்படுத்துதல், ஏமாற்றுதல், வார்த்தை தவறுதல் முதலிய அனைத்து அறியாமை குணங்களும் நாடாளும் அரசனிடமே இருந்தன.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாதிக்கப்பட்ட பாண்டவர்கள் பக்கம் இருந்து அறிவுரை கூறி அர்ஜுனனைப் போரில் ஈடுபடுத்தி தர்மத்தை நிலை நாட்டினார்.
ஒனறே ஒன்று மட்டும்தான் பிரச்சனை எனற நிலையில் பகவானே வந்தார் (அசுரன் இரண்ய கசிபு, இராவணன்).
ஒன்று 100 ஆகும் போது பஞ்ச பூத அறிவான ஐவருடன் (பாண்டவர்கள்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார்
கலியுகத்தில் ?
உலக விஷயங்கள்அதிகம்.
நம்மில், நமக்குள், இருக்கும் அறியாமைகள் பலமடங்கு அதிகம்.
ஒரு கணக்கு- எப்படிச் செய்வதென தெரியவில்லை.
ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபின் அந்தக் கணக்கு புரிகிறது. இந்த புரிதலுக்கு துணை புரியும் ஆதார அறிவே கடவுள். அதாவது கடவுள், அறியும் அறிவாக மட்டுமே இருக்கிறார் – அறிவே கடவுள்,
அறிவைத் தவிர இரண்டாவது விஷயம் இல்லை என்று நினைக்கிறேன்
No comments:
Post a Comment