தேவ யஜ்ஞம்
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு நற்பேறுகளுக்காக நன்றி கூறும் வகையில் தினந்தோறும் நாம் இறைவனுக்குப் பூஜை
செய்கிறோம் சமைத்த உணவை நிவேதம் செய்கிறோம் இது
தேவ யஜ்ஞ மாகும்
கோவிலுக்குச் சென்று தொழுவது தேவயஜ்ஞமாகும்
ப்ரஹ்ம யஜ்ஞம்
வேதத்தைக் கற்றும் ஓதியும் கற்பித்தும் அது நசியாமல் பாதுகாப்பது ப்ரஹ்ம யஜ்ஞமாகும்.
நம் சாஸ்த்ரங்கள், புராண இதிஹாஸங்கள் இவற்றை சிரத்தையுடன் படிப்பதும் அவற்றை அடுத்த தலை முறையினர்
கற்பதற்கான உதவிகள் செய்வதும் ப்ரஹ்ம யஜ்ஞமே.
பித்ரு யஜ்ஞம்
நாம் பிறக்கக் காரணமாயிருந்து நமக்கு சரீரத்தைக் கொடுத்து
அதை போஷித்து அறிவு புகட்டிய பெற்றோர்களை நன்கு பேணுதல் பித்ரு யஜ்ஞமாகும். அவர்கள இறந்தபின் அவர்களின்
நற்கதிக்காகச் செய்யப்படும் தர்ப்பணங்கள், ச்ராத்தம் முதலியவையும் பித்ரு யஜ்ஞமாகும் இவற்றின் மூலம் நாம் முந்தைய மூன்று தலைமுறைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.
மநுஷ்ய யஜ்ஞம்
நாள்தோறும் நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வசிக்கும் வீடு மற்றைய அடிப்படை வசதிகள் நமக்குக் கிடைப்பதற்கு பல மனிதர்கள் உழைக்க வேண்டி இருக்கிறது அவர்கள் அனைவருக்கும் தனித்தனியே நன்றி கூறுவது எனபது முடியாத காரியம். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் முன் அதிதிக்கு உணவிட்டு உண்ணுதல் விசேஷமாகும். முடிந்தவரை பசியுடன் இருப்பவர்களுக்கு உணவிடுதல் மற்றவிதங்களில் நம்மைச் சுற்றி உள்ளோர்களுக்கு உதவுதல் முதலியவை மநுஷ்ய யஜ்ஞ மாகும் இது ந்ரு யஜ்ஞம் என்றும் கூறப்படும்
பூத யஜ்ஞம்
பல்வேறு மிருகங்களும் தாவரங்களும் நேரிடையாகவும் இயற்கை சூழ்நிலையை பராமரிப்பதன்மூலமும் நமக்கு உதவுகின்றன. சமைத்த உணவை இறைவனுக்குப் படைத்தபின்
காக்கை முதலியவற்றுக்குப் போட்டுவிட்டு உண்பது பூத யஜ்ஞமாகும். அரிசி மாவால் கோலமிட்டு எறும்புகளுக்கு உணவிடுதல், பசு நாய் முதலியவற்றுக்கு உணவிடுதல்,
செடிகொடிகள்,பயிர்கள் வாடாமல் நீரூற்றுவதும் பூத யஜ்ஞமே
No comments:
Post a Comment