Thursday, January 13, 2011

கர்மம்-செயலை பற்றிய பொதுவான ஸந்தேஹம்

நான் என்ன செய்ய வேண்டும்? என்பது பொதுவான ஸந்தேஹம்
அர்ஜுனனைப் போல், குழப்பத்திலும் ஸந்தேஹத்திலும் இருந்து பாடம் கற்க முனைந்தேன் .
நன்றி - ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதிக்கு.
அவரது வீடுதோறும் கீதோபதேசம் என்ற நூலுக்கு.
கீதையின் வழிகாட்டலும்- என் புரிதலும் இங்கே.

 கர்மத்தைவிட ஞானம் உயர்ந்தது என்றால்,
 என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஈடுபடுத்துகிறாய்?
 முரண்பாடுள்ளது போன்ற சொற்களால் என் புத்தியை நீ   
 குழப்புவது போன்றுள்ளது.
 எதனால் நான் நலனைப் பெறுவேனோ (இரண்டில்) அந்த ஒன்றை 
 உறுதி செய்து கூறு  
 என்று பகவானிடத்தில் அர்ஜுனன் சரணடைந்தான்.

கர்மத்தைப் பற்றி ஸ்ரீ பகவானின் விளக்கம்

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித் யே கர் மண: (பகவத்கீதா 3-8)

விதிக்கபப்ட்ட கடமைகளை நீ செய்வாயாக;
ஏனெனில், செய்யாமையைவிட செய்தல் மேலானது
அதுவுமல்லாது, உன்னுடைய சரீர பராமரிப்பு கூட,
செயலின்மையால் நடக்காது.

வேதம்-, விஹித, நிஷித்த, காமய, ப்ராயச்சித்த என்று
நான்கு வித கர்மங்களைக் கூறுகின்றது.
விஹித கர்மம் என்பது நியத கர்மம் எனப்படும்.
வேதம்- வர்ணத்திற்கும்,ஆச்ரமத்திற்கும் தகுந்தவாறு
அன்றாடம் செய்ய வேண்டிய நித்ய கர்மங்களையும்
குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டிய நைமித்திக கர்மங்களையும் கூறுகிறது- இவை இரண்டும்
‘செய்யப்பட வேண்டியவை என்று விதிக்கப்படவை:;
சில கர்மங்களைச் செய்யக்கூடாது என்று வேதம் தடை செய்கிறது
ஹிம்ஸை செய்யக்கூடாது என்று வேதம் கூறுகிறது
இவை நிஷித்த கர்மங்களாகும் .
குறிப்பிட்ட பலன்களைப் பெறுவதற்காகச் செய்யும் கர்மங்கள் காம்ய கர்மங்கள் எனவும்
குறிப்பிட்ட பாப கார்யங்களுக்கு ( நாம் செய்யாமல் விட்டதாலோ,தவறான் வழியில் செய்தற்காகவோ) மன்னிப்பு கோரி
செய்யப்படும் கர்மங்கள்- ப்ராயச்சித்தம் எனப்படும்.
நியத கர்மங்களை யோக புத்தியுடன் செய்யும்போது அந்தக்கரண-சுத்தி பலனாகும். மற்றும் மனவளர்ச்சி, மனப் பக்குவம் ஏற்படுகிறது.
ஜீவனுக்கு முதலில் கொடுக்கப்பட்டது உயிர்சக்தி,பின் தேச காலத்தோடு கூடிய வாழ்க்கை
ஒவ்வோர் உயிருள்ள ஜீவனும் தான் எப்படியாவது பிழைத்திருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வு கொண்டுள்ளது
உயிர் பிழைத்திருப்பதற்கு மட்டுமே நமக்கு இந்தப் பிறவி கொடுக்கப் படவில்லை. ஸாதிக்க வேண்டிய புருஷார்த்தங்களாக - அறம்,பொருள், இன்பம், வீடு (மோக்ஷம்) என்ற நான்கையும் வேதம் காட்டுகிறது.

கர்மம்-செயல் அதன் பலன் அல்லது விளைவு தவிர்க்க முடியாது

பந்தம் என்கிற முடிச்சு மூன்று விஷயங்கள் கொண்டது
  1. நம்மை பற்றிய அறியாமை இதனால் நம்மை கர்த்தாவாக கருதுவது  
  2. கர்த்தா என்பதால் விளையும் ஆசையும் காமமும்
  3. ஆசையால் செய்வது கர்மம் அல்லது செயல்.
செயலால் ஏற்படுவது பந்தம்.

பற்றிய பந்தத்திலிருந்து விடுதலை அடைவது தான் மோஷம்


கர்மத்தைத் துறப்பதால் மோக்ஷம் அடையமுடியாது; இது உண்மை
கர்மத்தில் ஈடுபடுவதாலும் மோக்ஷத்தை அடையமுடியாது இதுவும் உண்மை.கர்மம் நம்மை பந்தத்தில் ஆழ்த்தக் கூடும் இதுவும் உண்மை
கர்மத்தை-செயலை யோக புத்தியுடன், கடமை உணர்வுடன் ஆற்றும் பொழுது மனம் பக்குவம் அடைகிறது.


செய்யாமையைவிட செய்தல் மேலானது.
கடமைகளைச் செய்தல் பந்தப்படுத்த வேண்டும் என்பது நியதி அல்ல. மாறாக, செய்யாமலிருந்தால் ஒன்றும் ஸாதிக்க முடியாது.
உடல் நலம் கெடும். அதைவிட மன நலம் கெடும். ஆகையால் செயலில் ஈடுபடுவது சிறந்ததாகும். செயலில் ஈடுபட அஞ்சவேண்டாம். செயலை யோக புத்தியுடன் செய் என்பதே ஸ்ரீ பகவானின் விளக்கம்


சரீர யாத்ரா“ நமது சரீரம் ஒவ்வொரு நிலையாக பயணம் செய்து
கொண்டு வருகிறது. இந்தப்பயணமானது செயல்களில் ஈடுபடாவிட்டால் நடக்காது.
யோக புத்தியுடன் செய்யபடும் செயல் மறைமுக ஸாதனமாகி மனம் சுத்தம் அடைந்து விடுதலைக்கு வழிவகுக்கிறது.
இப்படி யோக புத்தியுடன் செய்யப்படும் கர்மமே யஜ்ஞம் எனப்படுகிறது.

அடுத்து யஜ்ஞம் என்ற செயல் அது காட்டும் வழி என்ன என்பதை அறிய முயற்சிக்கிறேன் 

No comments:

Post a Comment